Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அமெரிக்காவில் நிலவும் சவால் - நோபல் குழு பரிசீலித்தவருக்கே வேலை இல்லை!

அமெரிக்காவில் நிலவும் சவால் - நோபல் குழு பரிசீலித்தவருக்கே வேலை இல்லை!
ஜாக் வெய்ஸ்
பகிரவும் WhatsApp Facebook

நோபல் பரிசுக் குழுவால் குறிப்பிடப்பட்ட ஆய்வுப் பின்னணி, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் எனச் சிறப்பான கல்வித் தகுதிகள் இருந்தும், 2,300-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பித்தும் நிரந்தர வேலை கிடைக்காமல் தவித்து வருகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ஜாக் வெய்ஸ். அவரது அனுபவம், அமெரிக்க வேலைவாய்ப்புச் சந்தையில் நிலவும் சவால்களை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

30 வயதான வெய்ஸ், கெமிக்கல் இன்ஜினியரிங்கில் முனைவர் பட்டம் பெற்றவர். இதற்கு முன்பு ரைஸ் பல்கலைக்கழகத்தில் சிறந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். 2018-ல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வைத் தொடங்கிய அவர், பனிக்கட்டி உருவாகும் செயல்முறைகள் குறித்து ஆராய்ந்தார். இவரது ஆய்வு, அறிவியல் ஆராய்ச்சியில் இயந்திரக் கற்றல் பயன்படுத்தப்படுவது தொடர்பாக 2024-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக் குழுவால் குறிப்பிடப்பட்டது.

இத்தகைய கல்விப் பின்னணி இருந்தும், 2024-ல் முனைவர் பட்டம் முடித்த பிறகு வேலை தேடுவது அவருக்குப் பெரும் போராட்டமாக மாறியது. மருந்து நிறுவனங்களில் ஆராய்ச்சிப் பணிகள், தேசிய ஆய்வகங்களில் ஆராய்ச்சியாளர் பயிற்சி வாய்ப்புகள் எனத் தொடங்கிய தேடல், பின்னர் மென்பொருள் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் விரிவடைந்தது. உணவு தயாரிக்கும் வேலைக்குக்கூட விண்ணப்பித்தார். பல இடங்களில் பதில் கிடைக்கவில்லை; சில இடங்களில் நிராகரிக்கப்பட்டார்.

2026 ஜனவரியில், செயற்கை நுண்ணறிவுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை கிடைத்தது. ஒரு மணி நேரத்துக்கு 70 டாலர் ஊதியம் கிடைத்தபோதிலும், வேலை தொடர்ந்து கிடைக்கவில்லை. மார்ச் மாதத்தில் அந்த ஒப்பந்தமும் முடிவுக்கு வந்தது. தற்போது உட்டா மாகாணத்தின் சால்ட் லேக் சிட்டியில் பெற்றோருடன் வசிக்கும் அவர், சட்டப் படிப்பைத் தொடர்வது, செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில் தொடங்குவது உள்ளிட்ட மாற்று வழிகளையும் பரிசீலித்து வருகிறார்.

அமெரிக்காவில் வேலைக்கு ஆள் எடுக்கும் வேகம் குறைந்திருப்பதும், நிறுவனங்கள் ஏற்கெனவே பணியாற்றுபவர்களைத் தக்கவைத்துக் கொள்வதும் புதிய வேலை தேடுபவர்களுக்கான வாய்ப்புகளைக் குறைக்கின்றன. விண்ணப்பங்களைத் தொடக்க நிலையில் வடிகட்ட செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதும் சவால்களை அதிகரிக்கிறது.

கல்வித் தகுதி உயர்வது மட்டுமே வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமல்ல என்பதை வெய்ஸின் அனுபவம் உணர்த்துகிறது. திறமையும், அறிவும் இருந்தாலும், அவற்றுக்குப் பொருத்தமான வாய்ப்புகள் கிடைக்காவிட்டால் வாழ்க்கைப் பயணம் எவ்வளவு கடினமாகும் என்பதற்கு அவரது நிலை ஓர் எடுத்துக்காட்டு.

முந்தைய செய்தி
உயரமான கட்டிடத்தில் பணிபுரிவோர் வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவு
அடுத்த செய்தி
Musk ordered Ukraine's military Starlink network slowdown

தொடர்புடைய செய்திகள்